Tuesday, August 9, 2011

படிக்க வேண்டிய சில நூல்கள்

பாரத  ஸ்டேட் வங்கி அதிகாரி திரு த . ஜெயக்குமார் வாதிரியார் அவர்கள் எழுதி
நெய்தல் பதிப்பகம் வெளிட்ட
நூலும் வாழ்வும் (வாதிரியார் சமுக வாழ்வியல் ஒரு ஆய்வு  )

திரு த . ஜெயக்குமார் வாதிரியார் அவர்கள் எழுதிய பிற நூல்கள்
1)  தலித் மள்ளரிய நோக்கில்
2) கதிர்கள் (கவிதைகள்
)                                                                                      


கவிமாமணி வன்னிய குடும்பன் எழுதி
சேர வர்மன்  பதிப்பகம்
பாளையம் கோ ட்டை
வெளியிட்ட
1) வீர மள்ளு
2) திசைகாட்டும் திருகோயில் மள்ளினமே!

Saturday, August 6, 2011

வாதிரியார்

கோயில்களின் குடுமிபோல குவலயத்தில் மிகசிறந்த
குடும்பரசர்  நாடுகளின் கூற்றங்களின் தலைவர்களே
காவல்மிகு வாரியர்கள் வாதிரியார்  ரானவர்கள்
கடும் போரில் நாடிழந்து  நெசவும் உழவும்  செய்யும் மள்ளர்
                      - கவி மாமணி வன்னிய குடும்பன்

Tuesday, July 26, 2011

வரலாறு நம்மை விடுதலை செய்யும்

வணக்கம்,
                     தங்கள் நல்லாதரவுடன் நம் வரலாறைச் சொல்ல தான்
                 
                     வலைத்தளத்தில் வலம் வருகிறோம்
                 
                       நமது  உண்மை வரலாற்றை உலகறியச் செய்ய

                     அரசு ஆணைகள், கல்வெட்டுகள் , இலக்கிய,சரித்திர 
                    ஆதாரங்கள்

                     ஏராளமாய் இருக்கிறது. தொடர்ந்து வலைத்தளம் வாருங்கள்

                    வரலாற்றை படிப்போம் ! வரலாற்றை படைப்போம்
                 
                           வரலாறு நம்மை விடுதலை செய்யும்
                                                                           - பிடல் காஸ்ட்ரோ

                                                     -நன்றி -

Monday, July 25, 2011

இவர்களை வரலாறு மன்னிக்க கூடாது

1956 ஆம் ஆண்டு அரசு வெளியட்ட தாழ்த்தபட்டோர்  (பட்டியல் சாதி) பட்டியலில் பள்ளரின் உட்பிரிவான வாதிரியார் சாதி சேலம் , கோவை மாவட்டகளில் மட்டும் உள்ளதாக குறிப்பிடபட்டிருந்தது.
வரலாறு தெரிந்த சான்றோர்களான   நம் முன்னோர்கள் வாதிரியார் பள்ளரின் உட்பிரிவு என்பதையும் ,
வாதிரியார் நெல்லை ராமநாதபுரம் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் எல்லாம் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும் அரசுக்கு மனு செய்தனர்.
                         அரசும் மனுவை ஏற்று ஆய்வு செய்து    கோரிக்கை    உண்மை என்பதை ஏற்று பள்ளரின் உட்பிரிவான வாதிரியார் மாநிலம் முழுமையும் தாழ்த்தபட்டோர் என்று 1957 ஆம் ஆண்டு ஆணையிட்டனர்.
ஆனால் இந்த உண்மையை மறைத்து வாதிரியார் சாதி தாழ்த்தபட்டோர் பட்டியலில் 1976  இல் தான் சேர்க்கப்பட்டதாக உண்மைக்கு புறம்பாக ( நம்மை ..... நினைத்து ) இன்று வரை ஏதோ   உள்நோக்கத்துடன் சிலர் கூறி   வருகிறார்கள்
 இவர்களை வரலாறு மன்னிக்க கூடாது

வாதிரியார் பள்ளரே 1957 ஆம் ஆண்டு அரசு ஆணையை வலிவுறுத்தும் 1976 ஆம் ஆண்டு அரசு ஆணை

Saturday, July 23, 2011

எது நம் வரலாறு ?

                        தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திரகுலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய ஏழு பிரிவுகள் தேவேந்திர குல வேளாளர் என்ற சமூகத்தின் உட்பிரிவுகள் ஆகும் .
                       அந்த உட்பிரிவுகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து, தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிடவந்த அறிவிப்புக்கு ஆதரவான மற்றும் மாறானகருத்துகள் வை.

இந்த முரண் பாடு ஏற்பட என்ன  காரணம்? 
வரலாறு தெரியாத காரணமே
எது நம் வரலாறு ?